Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

போரால் இந்தியாவுக்கு பாதிப்பு - பாமாயிலுக்கு மாறத் தொடங்கும் இறக்குமதியாளர்கள்!

போரால் இந்தியாவுக்கு பாதிப்பு - பாமாயிலுக்கு மாறத் தொடங்கும் இறக்குமதியாளர்கள்!

ரஷ்யாவில் துறைமுகக் கட்டமைப்புகள் போரால் சேதமடைந்ததால், 20 ஆயிரம் டன் சூரியகாந்தி எண்ணெய் கப்பல் போக்குவரத்து ஏற்கெனவே ரத்தாகிவிட்டது

பகிரவும் WhatsApp Facebook

கருங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள போரால், உக்ரைன், ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கான சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் துறைமுகக் கட்டமைப்புகள் போரால் சேதமடைந்ததால், 20 ஆயிரம் டன் சூரியகாந்தி எண்ணெய் கப்பல் போக்குவரத்து ஏற்கெனவே ரத்தாகிவிட்டது. இதனால், சில ரஷ்ய ஏற்றுமதியாளர்கள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க், உஸ்ட்-லுகா துறைமுகங்கள் வழியாக பால்டிக் கடல் வழியாக சூரியகாந்தி எண்ணெய் கப்பல்களை திருப்பி அனுப்ப முயன்று வருகின்றனர். எனினும், இந்த மாற்றுப் பாதை போக்குவரத்துக்கு செலவு அதிகமாகிறது. 


கருங்கடல் வழித்தடத்துடன் ஒப்பிடும்போது, கூடுதலாக 10 நாட்கள் காலதாதம் ஏற்படுகிறது. இந்தியா சூரியகாந்தி எண்ணெய் தேவைக்காக முற்றிலும் இறக்குமதியையே நம்பியுள்ளது. மாதத்துக்கு 2.5 லட்சம் டன் தேவைப்படுகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து சூரியகாந்து எண்ணெய் வருவதில் ஏற்படும் தாமதத்தால், அக்டோபர் மாத இறக்குமதி ஒரு லட்சம் டன்னாக குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த சில மாதங்களாக சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி குறைந்ததால், உள்நாட்டுச் சந்தை கையிருப்பும் குறைந்துள்ளது.

இதனால், இந்திய வணிகர்கள் சூரியகாந்து எண்ணெய்ககுப் பதிலாக, பாமாயில் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த வாரத்தில் 3 நாட்களில் மட்டும் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு 1.5 லட்சம் டன் கச்சா பாமாயில் இறக்குமதிக்கு முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் பாமாயில் தேவையை இந்தோனேஷியா மற்றும் மலேசிய ஏற்றுமதியாளர்கள் பூர்த்தி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறது. அதேநேரத்தில், பாமாயில் விலையும் உயருக்கும் என்ற தகவல், இந்திய இறக்குமதியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி
வைரலான போனஸ் உயர்வு அறிவிப்பு - ரயில்வே வாரியம் சொன்னதென்ன?
அடுத்த செய்தி
பூர்வி ஜெம்ஸை ரூ.9 கோடிக்கு வாங்கியது ஸ்கை கோல்டு

தொடர்புடைய செய்திகள்